செய்திகள் :

’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

post image

திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``பீகார் இடைத்தேர்தல் முழுக்க முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும்.

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் அப்படியே பிரதிபலிக்கும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று 2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.

எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடைபெற்றது. ஆனால் எதற்காக ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறார் என்று தெரியவில்லை.. ஏன் திமுக இதை தடுக்கிறார்கள்? எனத் தெரியவில்லை.. ஆனாலும் வாக்காளர் சேர்க்கும் இடங்களில் திமுக கொடி தான் பறக்கிறது. அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

திமுக புலி வால் பிடித்துவிட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.  எஸ்ஐஆரை வீடு வீடாக சேர்க்க வேண்டும். அது நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பீகார் வெற்றிக்கு காரணம் எஸ்.ஐ.ஆர். தான்.

அரசு ஊழியர்கள் போராட்டம் செய்வது நூற்றுக்கு நூறு சரி. 234 தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் தொகுதியில் இறந்தவர்கள், இரட்டை வாக்குகள் பெற்றவர்களை கண்டுபிடித்து நீக்குதல் போன்ற காரணங்களால் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் குறையும்” என்றார்.

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி ச... மேலும் பார்க்க

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து ... மேலும் பார்க்க

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்... மேலும் பார்க்க