'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆ...
ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர்.
பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதில், நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.
1981-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பூர்வாரதி பகுதியில் பிறந்த மத்வி ஹித்மாவுக்கு 43 வயது.
கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்து வந்திருக்கிறார் மத்வி ஹித்மா.
மிக இளம் வயதிலேயே, அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து ஒரு தளபதியாகி இருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தான்.
இந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு சுக்மாவில் CRPF மீது 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொடிய தாக்குதலில் `மத்வி ஹித்மா' முக்கிய பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.











