செய்திகள் :

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

post image

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.

அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது,

"இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!

இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.

நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.

மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.

இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!"

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து ... மேலும் பார்க்க

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க

"மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. 'டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..' என்... மேலும் பார்க்க