செய்திகள் :

``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

post image

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீரை, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி, 7,219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பிளவக்கல் அணை
பிளவக்கல் அணை

இந்த நிலையில், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் 47.56 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை கடந்த மாதம் 20-ஆம் தேதி 41 அடியை தாண்டியது.

இதையடுத்து, அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் மீண்டும் அணையின் நீர்மட்டம் 41 அடியை தாண்டியது.

இதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தண்ணீர் திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் கூறுகையில்,

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் இன்று முதல் 7 நாட்களுக்கு, பெரியார் கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் இன்று முதல் 28.02.2026 வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அணை திறக்கப்பட்டதாகவும்,

அணைக்கு அருகில் உள்ள பூங்காவை சீரமைக்க ஏற்கனவே ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த மாதம் டெண்டர் விட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிளவக்கல் அணை

நவீன வசதிகளுடன் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், 3 மாதங்கள் தொடரும் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை தமிழகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், SIR (எஸ்.ஐ.ஆர்)-ல் குளறுபடிகள் உள்ளதாகவும், மத்திய அரசும் தேர்தல் கமிஷனும் சேர்ந்து இதைச் செய்வதாகவும் நாம் சொல்வதை அவர்கள் காதில் வாங்கக்கூடிய அளவுக்கு அவர்கள் இல்லை எனவும், அவர்கள் போக்கிலேயே போகிறார்கள்; நாம் முடிந்த அளவுக்கு வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகளை செய்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 30-ம் தேதி வரை சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யலாம்- பயன்பெறும் மாவட்டங்களின் பட்டியல்

நெற்பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "தமிழக அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்... மேலும் பார்க்க

``ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' - விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி சாத்தியமானது?

இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் விருப்பப்பட்டு விவசாயத்திற்கு வருவது அதிகரித்து இருக்கிறது. லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால் (29) படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல், எதை... மேலும் பார்க்க

Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் சாகுபடி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி ... மேலும் பார்க்க

பழமர சாகுபடியில் வெற்றி பெற, இதுதான் அச்சாணி... தரமான உரக்கலவை இப்படித்தான் தயார் செய்ய வேண்டும்...

தொடர்சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடவுக் குழிகள் எடுத்து, உடனடியாகப் பழமரக் கன்றுகளை நடவு செய்ததால், அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 'ஊதா, பச்சை அரிசி கிலோ ரூ.500' - ஜப்பான், இந்தோனேசியா நெல்ரகத்தை பயிரிடும் விவசாயி

மகாராஷ்டிரா விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் உலகில் பல்வேறு நாடுகளில் விளையும் அரிய வகை நெல் ரகங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிட்டு வருகிறார்.மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் வசிக... மேலும் பார்க்க

தஞ்சை: முதல்வர் திறந்த நெல் கொள்முதல் நிலையம்; அதிகாரிகள் அலட்சியத்தால் செயல்பாட்டுக்கு வராத அவலம்!

த் டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் விளைச்சலும் அமோகம். இந்நிலையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் தாமத... மேலும் பார்க்க