செய்திகள் :

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

post image

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார். ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Andrea|ஆண்ட்ரியா
Andrea|ஆண்ட்ரியா

எனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கவின், ``நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தைத் தொடங்கினோம்.

எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர்... மேலும் பார்க்க

`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ - 100வது அகவையில் 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக் கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்க... மேலும் பார்க்க