செய்திகள் :

சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

post image

சிவகாசியில் ரீல்ஸ் மோகத்தில் சாலையில் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போன்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை பார்த்துக்கொண்டிருந்த டூவீலரில் சென்ற நபர் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இரண்டு இளைஞர்கள் பிரதான சாலையில் நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் ரீல்ஸ் எடுத்து சாலையில் செல்வோரின் கவனத்தை திருப்பியுள்ளனர் முயற்சித்துள்ளனர்.

அப்போது தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகன ஓட்டி

இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து நின்றதை கவனிக்காமல் அதன் பின்பக்கமாக மோதி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் விபத்தில் சிக்கியதை பார்த்து சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்த இளைஞர்கள், அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ரீல்ஸ் மோகத்தில் வேண்டுமென்றே இது போன்ற விபரீதமான வீடியோக்களை எடுத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துவதுடன், பொது மக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tejas: துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது - அதிர்ச்சி வீடியோ

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள... மேலும் பார்க்க

கேரளா: பஸ் மோதி 4 வயது சிறுமி பலி; பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செறுதோணி அருகே உள்ள தடியம்பாடு பரப்பள்ளிலைச் சேர்ந்த பென் ஜான்சன் என்பவரது மகள் ஹேசல் பென். நான்கு வயதே ஆன ஹேசல் பென் வாழத்தோப்பு பகுதியில் உள்ள கிரிஜோதி பள்ளியில் பிளே... மேலும் பார்க்க

மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துமதுரை ஜீவா ந... மேலும் பார்க்க

சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ... மேலும் பார்க்க

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க