செய்திகள் :

`இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை, ஆனால்!'- ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து ரஹ்மான்

post image

ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், " நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள்.

ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை.

அங்குள்ள நட்சத்திரங்கள் 'மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள்" என்று கூறியிருக்கிறார்.

Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?

தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவி... மேலும் பார்க்க

"குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன், அதனால் தான்"- 'காந்தா' குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ்

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் படம் 'காந்தா'. இப்... மேலும் பார்க்க

Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆ... மேலும் பார்க்க

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிரு... மேலும் பார்க்க

"எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.!" - நெகிழும் தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொ... மேலும் பார்க்க

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உ... மேலும் பார்க்க