செய்திகள் :

"எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.!" - நெகிழும் தனுஷ்

post image

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொண்ட வாட்ச் எது? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த தனுஷ், "நான் காதல் கொண்ட ஒரு வாட்ச் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்த அந்த வாட்ச் தான்.

 தனுஷ்
தனுஷ்

ஸ்கூல் படிக்கும்போது அந்த வாட்ச்சை அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார்.

அது டாலரின் விலையை விட குறைவானது தான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் வாட்ச்.

அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் தான்.

அந்த பேட்டரி முடிந்துவிட்டால் வாட்ச் வேலை செய்யாது. அந்த வாட்ச்சில் நிறைய கலர்கள் இருக்கும்.

நானும் எனது அக்காக்களும் ஊதா, மஞ்சள் என மாறி மாறி கட்டிக்கொள்வோம்.

பேட்ரி முடிந்து டைம் காமிக்காதப்போதும், அந்த வாட்ச்சை நான் கட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வேன்.

அந்தளவிற்கு எனக்கு அந்த வாட்ச் பிடிக்கும்.

தனுஷ்
தனுஷ்

இன்னும் அந்த வாட்ச்சை நான் பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன்.

இப்போது வரைக்கும் எனக்கு பிடித்த, மறக்க முடியாத ஒரு வாட்ச் என்றால் அதுதான்" என்று தனுஷ் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் தருகிறதா இந்த மாஸ்க்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிரு... மேலும் பார்க்க

``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உ... மேலும் பார்க்க

Re Release: 'புது படங்களைப் போல ரீரிலீஸுக்கும் இது முக்கியம்' - டல்லடிக்கும் ரீ ரிலீஸ்; காரணம் என்ன?

'3', 'புதுப்பேட்டை', 'கில்லி' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் என்கிற புதிய டிரெண்டை உருவாக்கியது. அப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் முன்பு கொண்டாடிய பல கல்ட் க்ளாசிக் படங்களை... மேலும் பார்க்க

"AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்" - விஜய் ஆண்டனி

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' ... மேலும் பார்க்க