Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்...
Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்
இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தது.

இந்த வெற்றிக்கு ஸ்மிரிதி மந்தனாவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்திருந்தார்.
இதனிடையே 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை ஸ்மிருதி மந்தனா இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோருடன் நடனமாடி வீடியோ செய்து வெளியிட்டியிருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பலாஷ் முச்சல் - ஸ்மிரிதி மந்தனா இருவருக்கும் வருகிற 23 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஸ்மிரிதி மந்தனாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
















