செய்திகள் :

"அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி" - நயினார் நாகேந்திரன்

post image

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த  வேண்டும். கோவையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, ரூ.18 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல.

நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து விரிவாக அனுப்பக்கோரியுள்ளது. ஆனால், அந்தத்திட்டம் குறித்து தவறாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் உள்ள இடைப்பட்ட தூரம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரயில்திட்டத்தை அமைப்பதற்கு குறைந்தபட்ச தூரம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், அந்த திட்டத்தை நிராகரித்ததாகக்கூறி கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இது பொதுமக்களை ஏமாற்றும் வேலையாக உள்ளது. அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், பல்வேறு சாலைகள் விஸ்தரிப்பு, அனைத்து கிராமங்களுக்கான ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், ரேசன் கடைகளில் இலவச அரிசி பல நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நயினார் நாகேந்திரன்

வரும் 2026-ல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்” என்றார். அவரிடம், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பதில் கூறாமல் பின்னர் பார்க்கலாம் என மழுப்பலாக பதில் கூறி கிளம்பிச் சென்றார்.    

``ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்!" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்ந... மேலும் பார்க்க

திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் த... மேலும் பார்க்க

``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க