ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு
இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் இன்று செந்தில்வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழா மேடையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ``நீதிக்கட்சித் தொடங்கப்பட்ட அதே தினத்தின் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு.
இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதலில் என் பெயர், அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைப் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். அண்ணன் செல்வப் பெருந்தகை நிகழ்ச்சிக்கு முன்னமே வந்துவிட்டார். நான் தாமதமாக வந்தேன்.
அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் அவர் நான் வருவதற்கு முன்பே 'வருகிறேன்' எனச் சென்றுவிட்டார். ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கிவிட்டோம். அப்போதும் அவர் வரவில்லை என்றதும் அவர் வருவாரா? மாட்டாரா? எனச் சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

பத்திரிக்கையாளர்களும் 'உதயநிதி அப்சட்; செல்வப் பெருந்தகை ஆப்செண்ட்' எனத் தலைப்பெல்லாம் வைத்துவிட்டார்கள். ஆனால், அண்ணன் செல்வப் பெருந்தகையும், அவரின் இயக்கமும் சரியான நேரத்துக்கு, சரியான இடத்துக்கு வந்துவிட்டார்.
சென்றால்தானே வரமுடியும்... ஒரு கொள்கை 100 வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்தக் கொள்கை உறுதியை நினைத்து நாம் பெருமைப் படவேண்டும். எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியான ஆற்றல் மிக்க இந்த இரும்புக்கோட்டையில் விரிசல் வந்துவிடாத எனச் சங்கிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் வந்திருப்பதுதான் செந்தில்வேலின் இந்த புத்தகம். சங்கிகளை மேலும் மேலும் பதறவைக்கும் விதமாகதான் இந்த புத்தகம் எழுதியிருக்கிறார். " என உரையாற்றினார்.
















