Gold Rate Today: 'கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்யாண் ஈஸ்ட் பகுதியில் அப்பார்ட்மென்டில் வசிக்கும் அந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த செவ்வாய் (நவ. 18) அன்று தூக்கிட்டுள்ளார்.
அவர் தினமும் கல்யாணிலிருந்து முலுண்டில் இருந்த தனது கல்லூரிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். செவ்வாய் காலை அதுபோல பயணிக்கும்போது சச்சரவு ஏற்பட்டுள்ளது.
வாலிபரின் தந்தை கூறியதன்படி, நெருக்கடியான நிலையில், ஒருவர் அவரை தள்ளி நிற்க சொல்ல, அவர் மராத்தியில் பதில் அளிக்காததால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
"ஒரு பயணி, தனது ஐந்து தோழர்களுடன் சேர்ந்து, மாணவனை கொடூரமாகத் தாக்கி, அவரை எண்ணற்றமுறை குத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பயமும் குமட்டலும் ஏற்பட்டு தானே நிலையத்தில் இறங்கியுள்ளார்" என காவல்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.
கல்லூரியில் முழு நேரமும் அமராத அந்த மாணவர் விரைவாக வீடுதிரும்பி அவரது தந்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார்.
"அவர் தனது மொபைல் போனில் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார், தந்தை அவரது குரலில் பயமும் பதற்றமும் இருப்பதை தந்தை உணர்ந்தார். அன்று மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகனைக் கண்டார்," என்று அந்த காவல்துறை அதிகாரி கூறயுள்ளார்.
தாக்குதலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது தந்தை புகார் அளித்துள்ளார். காவலர்கள் இதனை விபத்து மரணம் எனப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















