ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
தமிழ்நாடு: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 நாள்கள் தொடர் மழை! எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.
அதன் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறலாம்.
இதனால், அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23, 2025) தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
வரும் 24-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.
இங்கு கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
















