ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? - மன நல மருத்துவர் ஆலோசனை
கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர்

''உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அவரது குரலை ஒரு காமெடி நடிகர் அல்லது நடிகையின் குரலாகக் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள்.
அந்த நபர் பேசும் விஷயங்களை காமெடி நடிகர் குரலோடு பொருத்திப்பார்த்து அதன்மூலம் சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். இது பலராலும் முயன்று வெற்றிபெற்ற ஒரு வழிமுறை. இதன்மூலம் கோபம் என்ற மனநிலையில் இருந்து நீங்கள் விடுபட முடியும்.

நீங்கள் கோபமாக இருக்கும்போது, கோபத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் நீங்கள் உங்கள் சுவாசம் அசாதாரணமாவதை நீங்கள் உணரலாம். நீங்கள் கோபமாக உணரத் தொடங்கும்போது, ஆழ்ந்த சுவாசம், நேர்மறையான சுயபேச்சு அல்லது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த முயலவும். உங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும்.
`நிதானமாக' அல்லது `எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்' போன்ற பாசிட்டிவ் வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் குறையும்வரை ஆழமாக சுவாசிக்கும்போது அதை நீங்களே செய்யவும். கோபத்தை வெளிப்படுத்துவது அதை அடக்குவதைவிட சிறந்தது என்றாலும், அதைச் செய்ய சரியான வழி இருக்கிறது. உங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் CAR என்ற ஒரு பதம் இருக்கிறது. அதாவது, Change the Changeable, Accept the unchangeable and remove yourself from the unacceptable என்பார்கள். `உங்களால் மாற்ற முடிவதை மாற்றுங்கள், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அதேபோல், மாற்றவே முடியாத சூழலில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள்' என்பார்கள். இந்த எளிய வழியைப் பின்பற்றினால் எந்தச் சூழலையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்'' என்றார்.
















