செய்திகள் :

AUS v ENG: Ashes-ல் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அதிசயம்; முதல் நாளில் மாஸ் காட்டிய ஸ்டார்க், ஸ்டோக்ஸ்!

post image

கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு பேட் கம்மின்ஸ் தயாராக இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொண்டார்.

மேலும், ஜோஷ் ஹேசில்வுட்டும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி முதல் போட்டியில் இடம்பெறவில்லை.

தி ஆஷஸ்
The Ashes

ஆஷஸில் விக்கெட்டில் ஸ்டார்க் சென்சுரி!

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாததால் வேகப்பந்துவீச்சின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மிட்செல் ஸ்டார்க், முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததோடு நிற்காமல் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி ஒற்றை ஆளாக இங்கிலாந்தைச் சாய்த்தார்.

33 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. வெறும் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க். அதோடு ஆஷஸ் தொடரில் தனது 100-வது விக்கெட்டையும் ஸ்டார்க் கடந்தார்.

ஸ்டார்க்குக்கு உறுதுணையாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் பிரெண்டன் டக்கெட் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஒல்லி போப் 46 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.

அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும், மார்னஸ் லபுஷேனையும் ஆஸ்திரேலியா ஓப்பனிங் இறக்கியது.

ஆனால், அந்தப் புது முயற்சியை ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே உடைத்தார். ஜேக் வெதரால்ட் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் பக்கம் நடையைக் கட்டினார்.

அடுத்து 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்ற லபுஷேன் - ஸ்மித் கூட்டணியை மீண்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடைத்தார். 9 ரன்களில் லபுஷேன் ஏமாற்றமளித்தார்.

ஆஷஸ் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை!

அடுத்த ஓவரிலேயே ஸ்மித்தும் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கவாஜாவும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

அதன் பின்னர் 10 ஓவர்களுக்கு விக்கெட்டை இழக்காமல் ரன்களையும் வேகமாக அடித்துக்கொண்டிருந்த டிராவில் ஹெட் - கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப்பை பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்து கலைத்தார்.

அடுத்தடுத்து வந்தவர்களையும் ஸ்டோக்ஸ் அப்படியே பெவிலியனுக்கு அனுப்ப முதல் நாள் ஆட்டம் 72 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes

ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங்கில் இங்கிலாந்தை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இன்றைய முதல் நாளில் மட்டும் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன. இதுதான், ஆஷஸ் தொடர் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல் நாளில் விழுந்த அதிக விக்கெட்டுகள் ஆகும்.

இதற்கு முன்பு 1909-ல் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் மு... மேலும் பார்க்க

``கம்பீருக்கு எதிராக சிலர் அஜெண்டா" - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகினார். அதைத்தொடந்து சாம்பியன் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்ச... மேலும் பார்க்க

Australia: முதன்முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம்

பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஷஸ் தொடரில் ஜேக் வெதாரால்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகிய இரண்டு பூர்வீக குடி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இணைகின்றனர். 2019ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில... மேலும் பார்க்க

"விராட் கோலிதான் சிறந்த Clutch Player" - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் இரண்டு சிறந்த ஐகான்கள். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இருந்த பகைமை இவர்களுக்கு இடையிலும் இருந்தது. எனினும் தற்போது இருவரும் நட்புறவுடன்... மேலும் பார்க்க

Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக இணையத... மேலும் பார்க்க

IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைத... மேலும் பார்க்க