செய்திகள் :

'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

post image

கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை.

மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார்.

மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு ஐமுரி பகுதியிலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. லீலாமணி வசிக்கும் அதே பகுதிக்கு மோகன்லால் படப்பிடிப்புக்கு வந்திருப்பதை அறிந்தவர் தனது பேரனுடன் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார்.

Drishyam 3
Drishyam 3

மோகன்லாலை சந்திக்கப் போகிறோம் என புது சேலையை வாங்கி அணிந்து சென்றிருக்கிறார். மோகன்லாலை காண ரசிகர்களும் குவிந்திருக்கிறார்கள். அவர்கள் எவரையும் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு அருகில் அனுமதிக்கவில்லை.

பலரும் மோகன்லாலை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், லீலாமணி மோகன்லாலை சந்தித்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என உறுதியாக இருந்திருக்கிறார்.

அங்கிருந்த படக்குழுவினரிடமும் மோகன்லாலை சந்தித்த பிறகுதான் கிளம்புவேன் என பிடிவாதமாகச் சொல்லியிருக்கிறார். மாலை 5 மணிக்கு, தன்னை சந்திப்பதற்காக மூதாட்டி ஒருவர் காத்திருப்பதை அறிந்தவர் லீலாமணியை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

மோகன்லாலை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தவர் 'உங்களை ஒருமுறை தொட்டுக்கொள்ளட்டுமா' என ஆசையோடு கேட்டிருக்கிறார். லீலாமணி இந்த வார்த்த்தையைச் சொன்ன அடுத்த நொடியே அவரை அரவணைத்துக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு தான் ஒரு பாடல் வைத்திருப்பதாகவும், அதை அவர் முன் பாட வேண்டும் என்கிற ஆசையையும் லீலாமணி தெரிவித்திருக்கிறார். நேரம் காரணமாக அந்தப் பாடலை அவரால் மோகன்லாலிடம் பாடிக் காண்பிக்க முடியவில்லை.

Mohanlal
Mohanlal

இது குறித்து லீலாமணி, "நான் மோகன்லால் சாருடைய மிகப் பெரிய ரசிகை. அவர் நடித்த அனைத்துப் படமும் டிவியில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அவருடைய படங்களில் ‘ஆராம் தம்புரான்’ படம் மிகவும் பிடிக்கும்.

எனது பிள்ளைகளுடன் இணைந்து 'துடரும்' படத்தை கடைசியாகப் பார்த்தேன். 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். மூன்றாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்." என மோகன்லாலை சந்தித்த மகிழ்ச்சியில் கூறினார்.

Suresh Gopi: "அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது!" - சுரேஷ் கோபி

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை அடுக்கியவர் நடிகர் சுரேஷ் கோபி. அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எவையும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை. இது குறித்து அவரும் சமீபத்தில் மனோரமா ஊடக... மேலும் பார்க்க

Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கும்பலங்கி நைட்ஸ் ' என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடி... மேலும் பார்க்க

Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?

மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' ... மேலும் பார்க்க

Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?

இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி. அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொட... மேலும் பார்க்க

Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்!" - பகிர்கிறார் இயக்குநர்

மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்... மேலும் பார்க்க