செய்திகள் :

Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?

post image

இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி.

அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதிலும் இப்போது சில சிக்கல்களில் எழுந்திருக்கிறது.

Nivin Pauly
Nivin Pauly

தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை', 'பென்ஸ்' ஆகியப் படங்களும், மலையாளத்தில் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்', 'டால்பி தினேஷன்', 'பேபி கேர்ள்', 'சர்வம் மாயா', 'பெதெல்கம் குடும்ப யூனிட்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்', 'பார்மா (வெப் சீரிஸ்) ஆகிய படைப்புகளை கமிட் செய்திருந்தார் நிவின் பாலி.

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி தமிழில் அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கிறது.

அதிரடி வில்லனாக அப்படத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார். மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது.

Dear Students - Nivin Pauly
Dear Students - Nivin Pauly

அஜு வர்கீஸுடன் நிவின் பாலி நடித்திருக்கும் 'சர்வம் மாயா' திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதை தாண்டி அவர் நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

மேலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'பார்மா' என்கிற வெப் சீரிஸிலும் நிவின் பாலி நடித்து வருகிறார். 'ப்ரேமலு' வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கும் 'பெதெல்கம் குடும்ப யூனிட்' படத்தின் நிவின் பாலி நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இருந்தது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் கமிட் செய்து வைத்திருந்த 'டால்பி தினேஷன்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியத் திரைப்படங்களின் அறிவிப்பு போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கி இருக்கிறார்.

அந்தப் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் எதுவும் வெளிவராத காரணத்தினாலும், போஸ்டர்களை நிவின் பாலி நீக்கியதனாலும் அப்படங்கள் டிராப் ஆகிவிட்டன எனப் பேச்சுகள் இப்போது எழுந்திருக்கின்றன.

Gangster Of Mundanmala - Nivin Pauly
Gangster Of Mundanmala - Nivin Pauly

'ஒரே சமயத்தில் இத்தனை படங்களின் போஸ்டர்களை அவர் நீக்கியிருப்பது எதனால்' என்கிற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. 'நரிவேட்டா' படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர்தான் 'சேகர வர்மா ராஜாவு' படத்தை இயக்கவிருந்தார். வரலாற்று கதைகளத்தில் ப்ரீயட் படமாக அது உருவாக இருந்தது.

அந்தப் படம் டிராப் ஆகவில்லை எனவும், தற்சமயம் அப்படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் இயக்குநர் 'ஓடிடி ப்ளே' ஊடகத்திடம் நேற்று தெரிவித்திருக்கிறார். 'டால்பி தினேஷன்' பட இயக்குநர், " அந்தப் படத்தை இப்போது நிறுத்தி வைத்திருக்கிறோம்.

அந்தப் பட கதையின் ஐடியாவை மையமாக வைத்து மற்றொரு படத்திற்காக நான் வேலைகள் செய்து வருகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமாக, அந்தப் படம் குறித்தான அப்டேட்களை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுடன் எதற்காக 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியப் படங்களின் போஸ்டர்களை நீக்கினார் என்பதற்கு எந்தவொரு விளக்கத்தையும், தகவலையும் நிவின் பாலியின் குழுவினர் தரவில்லை.

Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்!" - பகிர்கிறார் இயக்குநர்

மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்... மேலும் பார்க்க

''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்னணி என்ன?

மலையாள சினிமாவில், ராணுவத்தை மையப்படுத்தியப் படங்களை எடுத்து பரிச்சயமானவர் மேஜர் ரவி. இந்திய ராணுவத்தில் இருந்த இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு சினிமாவின் பக்கம் வந்துவிட்டார்.‘கீர்த்தி சக்... மேலும் பார்க்க

Kalyani Priyadarshan: `கிளியே கிளியே' துபாயில் கல்யாணி பிரியதர்ஷன் | Photo Album

kalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshankalyani priyadarshan... மேலும் பார்க்க

"படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்"-அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பத... மேலும் பார்க்க

கேரள திரைப்பட விருதுகள்: "குழந்தைகளுக்கான படங்கள் எங்கே?" - ஆதங்கப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்

கேரள மாநிலத்தின் 55-வது திரைப்பட விருது நிகழ்வு நேற்று நடைபெற்றது. விருதாளர்கள் தேர்வுக் குழுவில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான விருதுகளுக்கான நடிகர்களைத் தேர்வு செய்தனர்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந... மேலும் பார்க்க