செய்திகள் :

Suresh Gopi: "அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது!" - சுரேஷ் கோபி

post image

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை அடுக்கியவர் நடிகர் சுரேஷ் கோபி. அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எவையும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை.

இது குறித்து அவரும் சமீபத்தில் மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “அரசியல் என்னுடைய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக வந்தமைந்தது” எனக் கூறியிருக்கிறார்.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

அந்தப் பேட்டியில் அவர், “1998-ல் ‘களியாட்டம்’ படத்துக்காக தேசிய விருது வாங்கிய அந்தத் தருணத்தையும், பிறகு 2000-ல் ‘ஜலமர்மரம்’ படத்துக்காக தயாரிப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய தருணத்தையும் எப்போதும் போற்றி மகிழ்வேன்.

அந்த விருதுகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. ஆனால் இப்படியான விஷயங்களுக்குப் பிறகு ஏதோ ஒன்று மாறிப்போனது. என் படங்கள் தேசிய அளவில் கவனம் பெறுவது நின்றுவிட்டது.

என்ன பிரச்சினை என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை, ஆனால், அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது. 2014-ல் ‘அப்போதெகரி’ படப்பிடிப்பின் போது நரேந்திர மோடியைச் சந்தித்ததிலிருந்து எல்லாம் மாறிப்போனது.

‘அப்போதெகரி’ படம் விருதுகளுக்குப் போய்ச் சேரவில்லை. சொல்லப்போனால், கேரள மாநிலத்தைத் தாண்டி அந்தப் படம் எவருக்கும் சென்று சேரவில்லை. எந்தக் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ‘படத்தைத் திரையிடுங்கள்’ என ஒரு நடிகனாக மட்டுமே கேட்டேன்.

ஆனால் நான் மத்திய அமைச்சராக இருந்ததால், அந்தக் கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது.

இதைத் தாண்டி என்னுடைய இன்னும் சில படங்களும் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

பாவம் பிஜு மேனன் ‘கருடன்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கலாம். அவருக்கும் கிடைக்கவில்லை. இந்த விஷயங்கள் எனக்கு வலியை ஏற்படுத்துகின்றன.

நான் ஒருநாளும் பத்ம விருதுக்கு விண்ணப்பித்ததில்லை. பலர் விண்ணப்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனை நான் செய்ய மாட்டேன். தேசிய விருதுகள் தாமாகவே வர வேண்டும்.

என்னை மூவர்ணக் கொடியால் சுற்றி, இந்தியா சார்பில் துப்பாக்கி ஏந்திய மரியாதை கொடுத்தால் போதும். இருந்தாலும், ஒருவேளை அப்படியொரு கெளரவம் கிடைத்தால் அதை மரியாதையோடு ஏற்றுக்கொள்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி

2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கும்பலங்கி நைட்ஸ் ' என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடி... மேலும் பார்க்க

Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?

மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' ... மேலும் பார்க்க

Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?

இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி. அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொட... மேலும் பார்க்க

Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்!" - பகிர்கிறார் இயக்குநர்

மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்... மேலும் பார்க்க

''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்னணி என்ன?

மலையாள சினிமாவில், ராணுவத்தை மையப்படுத்தியப் படங்களை எடுத்து பரிச்சயமானவர் மேஜர் ரவி. இந்திய ராணுவத்தில் இருந்த இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு சினிமாவின் பக்கம் வந்துவிட்டார்.‘கீர்த்தி சக்... மேலும் பார்க்க