செய்திகள் :

`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு

post image

மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.

பி.மூர்த்தி, கோ.தளபதி

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பெரும் எதிர்பார்ப்பான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது

ஆனால் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளது

இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், மா.ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

மெட்ரோ
மெட்ரோ

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழகத்தினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்சிக்கும் ஆசிரியர்!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது.காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவி... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை" - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம்... மேலும் பார்க்க

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து... மேலும் பார்க்க

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எ... மேலும் பார்க்க

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னா... மேலும் பார்க்க