கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணம...
சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92.
கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கியவர் இவர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1933-ம் ஆண்டு பிறந்த இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1975 முதல் 1993 வரை அங்கு செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றினார்.
கடந்த 2004-ம் ஆண்டு 'வணக்கம் வள்ளுவ' என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
வானம்பாடி கவிதை இயக்கத்தில் முக்கியப் பங்களிப்புகளை இவர் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, 'அரிமா நோக்கு' என்ற ஆய்விதழில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும், அறிவியல் தமிழ் மன்றத்திலும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றியிருக்கிறார்.
இவருடைய மறைவுக்கு இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.



















