செய்திகள் :

புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்

post image

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம்.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை.

புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், "தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும்" என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

விஜய்
விஜய்

அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில்  பேசுகிறார்” என்றார்.

அதையடுத்து, "நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம்.

எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார்.

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின்... மேலும் பார்க்க

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துற... மேலும் பார்க்க

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் க... மேலும் பார்க்க

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால்,... மேலும் பார்க்க

ஆட்டத்தை தொடங்கிய மகாராஷ்டிரா பாஜக; தொட்டதற்கெல்லாம் டெல்லி சந்திப்பு! - சிக்கலில் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் சாதாரண ஒரு அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், துணை முதல்... மேலும் பார்க்க

TVK Vijay: ``விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" - ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.... மேலும் பார்க்க