செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறையில் கடும் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் செல்ல தடை

post image

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் பாதிப்பு, அவ்வப்போது மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து ஓடைகள் வழியாக திடீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக செண்பகத்தோப்புப் பகுதியில் உள்ள மீன்வெட்டிபாறை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மீன்வெட்டிபாறை

திடீர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. அதேபோல், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சதுரகிரி செல்லும் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சதுரகிரி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! - `வாவ்’ ஊட்டி

ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட... மேலும் பார்க்க

தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album

வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீத... மேலும் பார்க்க

தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும... மேலும் பார்க்க

நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அற... மேலும் பார்க்க

Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?

சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து ... மேலும் பார்க்க