"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A
தங்கம் போல, வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.
அதே மாதிரி, இனி வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். இதற்கான புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
எங்கெல்லாம் இந்தக் கடன் கிடைக்கும்?
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் படி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக்கடன் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வெள்ளிக்கு அடமானக் கடன் வழங்கும்.

எதற்கெல்லாம் கிடைக்கும்?
இந்த அடமானக் கடன் வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி நாணயங்களுக்குத் தான் கிடைக்கும்.
வெள்ளிக் கட்டிகள், வெள்ளி இ.டி.எஃப்கள், வெள்ளி சம்பந்தமான மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இந்த விதிமுறைகளின்படி கடன் கிடைக்காது.
எவ்வளவு கடன் பெற முடியும்?
ஒரு நபருக்கு 10 கிலோ கிராம் வரையிலான வெள்ளி நகைகளுக்கும், 500 கிராம் வரையிலான வெள்ளி நாணயங்களுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும்.
Loan to Value - LTV எவ்வளவு?
ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு வெள்ளியின் 85 சதவிகித மதிப்பு வரையில் (Loan to Value - LTV) கடன் பெறலாம்.
ரூ.2.5 - ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு வெள்ளியின் 80 சதவிகித மதிப்பு வரையில் கடன் பெறலாம்.
ரூ.5 லட்சத்திற்கு மேலான கடனுக்கு வெள்ளியின் 75 சதவிகித மதிப்பு வரையில் கடன் பெறலாம்.
இந்த மதிப்பு எப்படி கணக்கிடப்படும்?
குறிப்பிட்ட தினத்தில் இருந்து கடந்த 30 தினங்களுக்கு சந்தையின் முடிவில் இருந்த வெள்ளி விலையின் சராசரி மதிப்பிடப்படும்.
கடந்த நாளில், சந்தையின் முடிவில் இருந்த வெள்ளி விலை.
இந்த இரண்டில் எது குறைவாக உள்ளதோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வங்கிகளுக்கான விதிமுறை என்ன?
அடமானக் கடன் முழுவதும் அடைக்கப்பட்ட ஏழு வேலை நாள்களுக்குள் அடமான நகையை வங்கிகள் வாடிக்கையாளருக்குத் தந்துவிட வேண்டும்.
இதில் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு நாளுக்கும் வங்கி அந்த வாடிக்கையாளருக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.
வெள்ளி அடமானக் கடன் எப்போதிருந்து அமலுக்கு வருகிறது?
2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெள்ளி நகை அல்லது நாணயங்களை அடமானம் வைத்துக் கடன் பெறலாம்.


















