மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போ...
"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம்.
அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது.
களத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் எதிரிகள் தான். எதிரிகள் என்றால் அவர்கள் எல்லோரும் வெறும் அரசியல் எதிரிகள் மட்டும் தான்.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடும் எந்தப் பகைமையும் கிடையாது. அரசியலிலே தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கமுடியும் என்று சொன்னால் அது திராவிட ஆட்சியால் மட்டும்தான் முடியும்.
அதனை இந்த 5 ஆண்டுகளிலே நிரூபித்தும் காட்டி இருக்கிறோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம்.

செய்வதைத் தான் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. எந்த ஏமாற்று வேலைகளும் தமிழக மக்கள் மத்தியில் எடுப்படாது" என்று பேசியிருக்கிறார்.
















