"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?
வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை.
இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை.
ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன.
இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார்.

ட்ரம்ப் பதிவு
தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, "உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது.
அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது.
இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் பதில்
ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார்.
ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது" என்று பதிலளித்துள்ளார்.















