மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போ...
"ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார்" - அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது.
குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்.

இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.
ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.
இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர்.
ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.



















