Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னண...
Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?
சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல் இருப்பதே ஆகும்.
இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், சந்திக்காதவர்கள் என ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் அனைவருமே KYV-ஐ அப்டேட் செய்வது மிக அவசியமாகும்.

KYV என்றால் என்ன?
Know Your Vehicle என்பதன் சுருக்கமே KYV. அதாவது உங்களுடைய ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட வாகனத்துடன் தான் இணைந்திருக்கிறது என்பதன் ஆதாரம் தான் இது.
KYV செய்யும்போது, உங்கள் ஃபாஸ்ட் டேக்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திற்கும் பக்காவாக சென்றுவிடும்.
KYV அப்டேட் செய்வது எப்படி?
https://fastag.ihmcl.com என்கிற இணையதளத்திற்குள் செல்லவும்.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 'Log in' செய்யவும்.
அடுத்ததாக, உங்களது வாகனத்தின் முன்பக்க புகைப்படத்தை ஃபாஸ்ட் டேக் தெரிவதுபோல அப்லோடு செய்துகொள்ளவும்.
பின், உங்களுடைய ஆர்.சி தகவல்கள் தானாகவே பதிவாகும். அப்படியாகவில்லை எனில் நீங்களே பதிவு செய்யுங்கள்.

இதை முடித்து 'Confirm' கொடுத்து சப்மிட் செய்தால் போதும். உங்களுடைய KYV அப்டேட் ஆகிவிடும்.
இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1033 என்கிற எண்ணுக்கு போன் செய்யலாம் அல்லது ஃபாஸ்ட் டேக் வழங்கிய வங்கியின் உதவியை நாடலாம்.
உங்கள் ஃபாஸ்ட் டேக் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், எப்போதும் ஆக்டிவாக இருக்கவும் கட்டாயம் KYV செஞ்சுடுங்க மக்களே.


















