Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி - குவியும் வாழ்த்து...
``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.
ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது.

இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.
இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன.
இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.
தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.
எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும்.
அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுமா என்று பார்ப்போம்.
















