"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர்...
`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை.
இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது.

விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார்.
தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, "அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம்.
வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்" என்று பேட்டியளித்திருக்கிறார்.
















