செய்திகள் :

"ஒவ்வொரு முறையும் மனசு உடையும்"- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத்

post image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேசியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

“நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், அவருடைய ஒருநாள் சராசரி 56 ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறுசெய்தார் என்றும் எனக்குப் புரியவில்லை.

ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்குக்கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது. ரிஷப் பண்ட்டின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

பத்ரிநாத்
பத்ரிநாத்

சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா எனப் பார்த்து ஏமாறும் ஒவ்வொரு முறையும் மனசு உடையும்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

IND vs SA: பலவீனமான பேட்டிங் வரிசை; பூடகமாக விரக்தியை வெளிப்படுத்தும் கருண் நாயர்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், அணியில் இடம்பெறாத இந்திய பேட்ஸ்மேன... மேலும் பார்க்க

`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது.நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு

நேற்று பார்வை சவால் கொண்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகையைச் சூடியுள்ளது.கொழும்பில் உள்ள பி சாரா ஓவலில் நடந்த இந்தப் போட்டியில் நேபாள அணியை ஏ... மேலும் பார்க்க

smriti mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்த... மேலும் பார்க்க

Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!

104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது.ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வத... மேலும் பார்க்க