செய்திகள் :

காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன்

post image

"சின்ன வயசுல எனக்கு ஸ்கூல்ல கிடைச்ச ஒவ்வொரு கைதட்டல்களும் இன்னைக்கு நான் சினிமாக்குள்ள வர்றதுக்கு ஒரு தொடக்கப் புள்ளி" என்று தன் பள்ளிகால நினைவுகளை ஹேப்பியாக பகிர தொடர்கிறார் நடிகர் காளி வெங்கட் .

நேற்று (ஜூலை 12) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் பள்ளிக்கூடத்து மாணவர் தான் இன்றைக்கு நமக்கு பிடித்த நடிகர் காளி வெங்கட்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காளி வெங்கட்டின் ரீயூனியன் அனுபவம்!

காளி வெங்கட் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட அந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தன.

30 ஆண்டுகள் கழித்து, தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு சென்ற அனுபவம் குறித்து காளி வெங்கட் அவர்களிடம் பேசினோம்.

மகிழ்ச்சியாக பேசத் தொடங்கிய அவர், "கிட்டத்தட்ட 30 வருஷம் கழிச்சு மறுபடியும் ஸ்கூலுக்குள்ள போகும்போது ஏதோ முதல் நாள் ஸ்கூலுக்குப் போற மாதிரியான ஒரு உணர்வு இருந்துச்சு. முதல் முதல்ல ஸ்கூலுக்குள்ள போகும்போது ஒரு பதற்றம் இருக்கும்ல... அந்தப் பதற்றத்தை என்னால அப்படியே ஃபீல் பண்ண முடிஞ்சுது.

திரும்ப எல்லா ஃபிரெண்ட்ஸ் பாத்தறணும்னு தோணுச்சு...

பத்தாம் கிளாஸுக்கு அப்புறம் ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சு போயிட்டோம். ரீயூனியன்னு பேச ஆரம்பிச்சதுமே, திரும்ப எல்லா ஃபிரெண்ட்ஸ் பாத்தறணும்னு தோணுச்சு. ஏன்னா, இதுநாள் வரைக்கும் எங்கூட படிச்ச மூணு நாலு பேரோட கான்டெக்ட் மட்டும்தான் எங்கிட்ட இருந்துச்சு.

மத்தவங்க எல்லாம் எப்படி இருப்பாங்கன்னு பாக்குறதுக்கு எங்களுக்கு ஆர்வம். அதனால, தேவையான எல்லா முயற்சியையும் எடுத்தோம்.

கழுகுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ரீயூனியன் குரூப்பைச் சின்னதா ஆரம்பிச்சாங்க. நான் அதுல ஜாயின் பண்ணுனதும், 'நீங்க குரூப்ல இருக்கீங்கன்னு எல்லாருக்கும் தெரியட்டும், ஒரு வாய்ஸ் நோட் போடுங்க'னு சொன்னாங்க . நானோ, 'வாய்ஸ் நோட் எதுக்கு, நான் வீடியோவே போடுறேன்'னு ஒரு வீடியோ எடுத்துப் போட்டேன்.

காளி வெங்கட்
காளி வெங்கட்

1,200 மாணவர்கள் இந்த ரீயுனியன்ல கலந்துகிட்டாங்க...

அந்த வீடியோவைப் பார்த்ததுக்கு அப்புறம்தான், 'இதே மாதிரி நம்ம மத்த சினிமா நண்பர்கள் கிட்டயும் ஏன் ஆடியோ, வீடியோ வடிவுல வாழ்த்து செய்தி கேட்கக் கூடாது?'ன்னு எனக்குத் தோணுச்சு. அப்படி நான் கேட்டதும், நம்ம வட்டாரத்துல இருக்குற ஒரு 30-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் உடனே வீடியோ வாழ்த்து கொடுத்தாங்க.

இந்த விஷயம் சோசியல் மீடியாவில பரவத் தொடங்கினதும், தமிழ்நாடு முழுக்க ஒரு பெரிய கவனத்தைப் பெற்று கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன் பயங்கர வைரல் ஆகிடுச்சு. முதல்ல ஒரு குறிப்பிட்ட பேட்ச் மட்டும்தான் பிளான் பண்ணியிருந்தோம்.

ஆனா எல்லா பேட்ச் மாணவர்களும் வர விரும்புனதால, கிட்டத்தட்ட 1,200 மாணவர்கள் இந்த ரீயுனியன்ல கலந்துகிட்டாங்க. இந்த ரீயூனியன் இவ்வளவு பெரிசா நடக்க நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். இதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

ஒரு காலத்துல 'கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சேன்'னு சொல்றதுக்கு.!

ஒரு காலத்துல 'கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சேன்'னு சொல்றதுக்கு ஒரு தயக்கம் இருந்ததுண்டு. ஆனா, இப்போ நான் ஒரு அரசுப் பள்ளியில படிச்ச மாணவன்'னு சொல்லிக்கிறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. முகம் தெரிந்த ஒரு நடிகனா நான் இதைச் சொல்லும்போது, அது இன்னும் நிறைய பேருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்னு நம்புறேன்.

இதுல எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் என்னன்னா, என் கூட படிச்ச பேட்ச்மேட்ஸ் எல்லாரும் இப்போ பெரிய பெரிய பதவிகள்ல இருக்காங்க. ஒருத்தர் நீதிபதியா இருக்காரு, ஒருத்தர் உளவுத்துறையில அதிகாரியா இருக்காரு, அப்புறம் ஃபயர் அண்ட் சேஃப்டி அதிகாரி, தாசில்தார் என பல துறைகள்ல சாதிச்சிருக்காங்க. என் கூட படிச்ச ஒரு பொண்ணு அதே ஸ்கூல்ல இப்போ உதவி தலைமை ஆசிரியையா இருக்காங்க... ஒருத்தர் பெரிய தொழிலதிபராவும் இருக்காரு.

நடிகர் காளி வெங்கட்
நடிகர் காளி வெங்கட்

நான் ஒரு நடிகன் ஆகணும்னு நினைச்சதே இல்லை

நிஜமா சொல்லணும்னா, நான் ஒரு நடிகன் ஆகணும்னு நினைச்சதே இல்லை, அது என் நோக்கமும் கிடையாது. எனக்குப் பாட்டு பாடணும்னுதான் ஆசை இருந்தது.

எங்க ஊர்ல ஒரு நாடகம் போடும் போது, அதுல நான் பாட்டு பாடுனேன். அடுத்த நாடகம் போடும்போது, அதுல நடிக்க வேண்டிய ஒரு பையன் 'நடிக்க மாட்டேன்'னு சொல்லிட்டான். அது ஒரு பெண் கதாபாத்திரம்.

அவன் நடிக்கக் கூச்சப்பட்டதால, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அப்போ எனக்கு 13, 14 வயசுதான் இருக்கும். அந்த வயசுல நான் அந்த கேரக்டரை நடிச்சு காட்டினப்போ, டைரக்டர் (அவர் எனக்கு மாமா தான்) 'நீ நல்லா பண்றடா, நீயே நடிச்சிரு'ன்னு சொல்லிட்டார். அப்படி நடிச்சதுதான் என் நடிப்பு பயணத்தோட ஆரம்பம்.

வாலி சாரோட பேட்டியைக் கேட்டுதான்.!

அந்த நாடகத்துல எனக்குக் கிடைச்ச பாராட்டுகளும், தொடர்ச்சியா நிகழ்ச்சிகள்ல நான் பாடின பாட்டுக்கு கிடைச்ச பாராட்டுகளும், என்னை ஒரு செலிபிரிட்டியா மாத்திருச்சு. ஸ்கூல்ல கிடைச்ச அந்த அங்கீகாரம் தான் என்னைய இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கு.

நான் சின்ன வயசுல ஒரு இயக்குநராகவோ, பாடகராகவோ, குறிப்பா ஒரு 'பாடலாசிரியராகவோ' ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். 15, 16 வயசுல நிறைய கவிதைகள் எல்லாம் எழுதி பாக்கெட்டில வச்சிருப்பேன். ஒரு தீவிரமான கவிஞன் மாதிரி எனக்கே ஒரு ஃபீல் இருந்தது.

ஆனா ஒரு நாள், 'ஆல் இந்தியா' ரேடியோவுல கவிஞர் வாலி சாரோட பேட்டியைக் கேட்டேன். அதைக் கேட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, பாடலாசிரியர் ஆகுறது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கு இசையைப் பத்தின அறிவும், வாழ்க்கையைப் பத்தின புரிதலும் வேணும்'னு. 'அய்யய்யோ இது நமக்கு வராது'ன்னு அன்னையோட அந்த கவிதை டைரியை மூடி பரண்மேல தூக்கிப் போட்டுட்டேன்.

நடிகர் காளி வெங்கட்
நடிகர் காளி வெங்கட்

ஸ்கூல் கொடுத்த அங்கீகாரம்!

சரி, நமக்கு வர்றதைச் செய்வோம்'னு நடிப்புக்குள்ள வந்தேன். சினிமாவுக்கு வந்த புதுசுலயும் ஆரம்பத்துல நமக்கு இதுவும் வராதோன்னு தோணுச்சு, அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.

என்னோட முதல் பட இயக்குநர் விஜய் பிரபாகரன் தான் எனக்கு ஒரு நல்ல குருநாதரா இருந்து, ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுகணும், எப்படி உள்வாங்கணும்'னு சொல்லிக் கொடுத்தார். இப்படி ஸ்கூல் கொடுத்த அங்கீகாரமும், முறையான வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு என்னை ஒரு நடிகனா இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!" என்று பேச்சை முடிக்க போனாவர், கடைசியாக...

"நாங்க எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்காம, மாணவர்கள் மட்டும் கலந்துகிட்டோம். அதனால, எங்களுக்கு ஏதோ எங்க பள்ளிகாலத்தை அப்படியே ரி-கிரியேட் பண்ண மாதிரி ஃபீல்" என்று நெகிழ்ச்சியாக பேசி முடித்தார் காளி வெங்கட்.!

`` 'நல்லா இருக்கு... இன்னும் சிறப்பா செய்வீங்க'ன்னு சொன்னாங்க!'- எஸ்.ஜானகி நினைவுகள் பகிரும் சிற்பி

ஒரு குரல் மௌனமாகிவிட்டது. ஆனால், அந்த மௌனம்கூட இசையாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.ரேடியோவின் மெல்லிய சத்தத்தில்... அதிகாலை கோயில் திருவிழா மேடைகளில்... பேருந்து ஜன்னலோரப் பயணங்களில்... காதலை முதன்முதலா... மேலும் பார்க்க

Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

"விஜய் படத்தில் விஜய்யை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்; அதை மாற்றியது இந்த இருவர்தான்" - அமீர்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'Train'. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும்... மேலும் பார்க்க

Train: ``'விடுதலை' படத்திலிருந்தே விஜய் சேதுபதி எங்களில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்" - வெற்றிமாறன்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

Train: ``கடந்த 6 வருஷத்துல மிஷ்கின் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்" - இயக்குநர் ராம்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

Train: ``இவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கும்" - விஜய் சேதுபதி கலகல பேச்சு!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு 'டார்க் த்ரி... மேலும் பார்க்க