செய்திகள் :

'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

post image

நேற்று (ஜூலை 8, 2026), மேற்கு வங்கம் பாருய்பூரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திரிணாமும் காங்கிரஸ் பேரணி நடத்தியது.

அந்தப் போராட்டத்தைத் தடுக்க பாஜக-வினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கு இடையேயும் கடுமையான வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது முட்டைகளும் வீசப்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர்.

மம்தா பானர்ஜி

அதன் பின், பேரணி முடியும் போது, திரிணாமுல் தொண்டர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டின் முன் பெரியளவில் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தைக் கலைப்பதற்காக மம்தா பானர்ஜி வெளியே வந்தார்.

அப்போது தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை மம்தா பானர்ஜி அறைந்தார். கூடவே, சிலரை தள்ளவும் செய்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜி, "இந்தப் பேரணியை நடத்த எங்களிடம் நீதிமன்றத்தின் அனுமதி இருந்தது.

அப்படி இருந்தும், அவர்கள் எங்கள் கட்சிப் பெண்களைத் தாக்கினர்.

எங்களது தொண்டர்கள் பலருக்குக் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களைக் காப்பாற்றவே நான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது.

இன்று காலையிலேயே எனது வீட்டின் அருகே அவர்கள் பைக் பேரணி நடத்தி எனக்கு மிரட்டல் விடுத்தனர். பேரணி நடந்த வழிநெடுகிலும் டிஜே ஸ்பீக்கர்களை அலறவிட்டதோடு, நீதிமன்ற அனுமதியோடு நாங்கள் வைத்திருந்த ஹேண்ட் மைக்குகளையும் பிடுங்கிக் கொண்டனர்.

வருத்தத்துடன் சொல்கிறேன்... காவல்துறை பாஜக தொண்டர்களைப் போலச் செயல்படுகிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க