செய்திகள் :

குமரி லாக்கப் மரணம்: "சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது" - மாற்றுத்திறனாளியின் உறவினர்கள் ஆவேசம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருந்தார்.

இவர் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக கடந்த 9-ம் தேதி, தென்தாமரைக் குளம் போலீஸார் சோதனை நடத்தி கடையில் இருந்து குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து சபரிவர்மனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் சிறையில்  விசாரணைக் கைதியாக அடைத்தனர்.

இதற்கிடையே இன்று (ஜூலை 13) காலை சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரி வர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையே சபரி வர்மனின் உடலைப் பார்த்த உறவினர்கள் உடலில் காயம் உள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். 

இது குறித்து சபரி வர்மனின் உறவினர் விநாயக மூர்த்தி கூறுகையில், "சபரிவர்மன் மாற்றுத்திறனாளி. அவரது உடல் முழுவதும் அடித்த காயங்கள் உள்ளன. உடல் பகுதிகள் சிவந்திருக்கிறது. அவரது முகம் மிகவும் கறுத்துப்போய் உள்ளது.

உறவினர்கள் மறியல்
உறவினர்கள் மறியல்

முதுகில் இருந்து கீழ் பகுதி வரை காயம் உள்ளது. அவர் கீழே விழுந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லுகிறார்கள். அவர் மாற்றுத்திறனாளி உழைத்து பெற்றோரையும், மனைவியையும் குழந்தையையும் கவனித்து வந்தார். இப்போது அவர்களது குடும்பம் ஆதரவு இல்லாமல் நிற்கிறது.

குடும்பத்தினர் தினமும் சாப்பிடவே வழி இல்லாமல் உள்ளனர். சிறையில் இருந்து அவரை அழைத்து வரும்போது இறந்ததாகக் கூறுகிறார்கள் அவரை சிறையில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்களா இல்லை நடக்க வைத்து அழைத்து வந்தார்கள் என்பதை போலீசார் விளக்க வேண்டும்" என்றார்.

லாக்கப் மரணத்தை கண்டித்து போராட்டம்
லாக்கப் மரணத்தை கண்டித்து போராட்டம்

சபரி வர்மனின் உடலை பார்த்த உறவினரான மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "வியாழக்கிழமை காலையில் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை அடித்த காயங்கள் உடல் முழுவதும் உள்ளன. காவல்துறையினர் வேண்டுமென்றே சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.

அவரது உடலை வாங்க வேண்டும் என்றால், அடித்தவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது. அவரை அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர். கஞ்சா வழக்கு பல இடங்கள் நடக்கிறது.

அதற்காக அடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. இவரை அடித்து கொலை செய்தவரைக் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.

சபரி வர்மனை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்: திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; தவெக நிர்வாகி மீது புகார்; கனிமொழி கண்டனம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண். ... மேலும் பார்க்க

"என்னைத் தூக்கிலிடுங்கள்; நான் காந்தி அல்ல" - ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்ற குற்றவாளி திமிர் பதில்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாறா போத்துண்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (61). செந்தாமரையின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்களான... மேலும் பார்க்க

குட்கா விற்றதாக கைதுசெய்யப்பட்ட இளைஞர் சிறையில் மரணம்; போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் கொதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்தஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவர்தனது வீட்டின் அருகே பெட்டிக... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க