செய்திகள் :

கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீா் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தயக்கம் காட்டும் கும்பகோணம் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிா்வாகத் துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டனா்.

தொடா்ந்து, மாநகராட்சி ஆணையருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஜன. 27- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, நகராட்சி நிா்வாகத்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பே... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க