செய்திகள் :

குருப்பெயர்ச்சி 2026 : மிதுன ராசிக்கு குருவருளால் வீடு - மனை வாங்கும் யோகம்; அதிரடி லாபம் உண்டு.!

post image

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) ஜூன்-2 முதல் 2-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப்பத்திரத்தை மீட்பீர்கள், பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

1.குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தேக ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தள்ளிப்போன வீட்டுச் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள்.

2. தடைகள், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகும். நிம்மதி பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வாகனத்தில் வலம் வருவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.

3. சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையுடன் நெருக்கமாக இருப்பார்கள். தொழிலில் அதிரடி வளர்ச்சி உண்டு. சிலர் புதுத் தொழில் தொடங்கி, அதில் வெற்றி பெறுவார்கள். அதேநேரம், கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

4. குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சகோதரிக்குத் திருமணம் கூடிவரும். சிலருக்கு, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இடமாற்றம் வந்துசேரலாம். அதேநேரம் கௌரவச் செலவுகளும் வரும்.

5. சிலருக்கு, குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில்... புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சொத்திலிருந்து வில்லங்கம் நீங்கும்.

குரு பகவான்

6. குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அரசு வேலைகள் உடனே முடியும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.

7. குருபகவான் 8 மற்றும் 10-வது வீட்டைப் பார்ப்பதால், எதிர்பார்த்தபடி பணம் வரும். முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். விசா கிடைத்து, திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

8. சிலருக்குக் கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் மதிப்புகூடும். செலவுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள்.

9. வியாபாரத்தில், புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிரடியாக லாபம் ஈட்டுவீர்கள். உங்கள் ரசனைக்கு ஏற்ப கடையை மாற்றி அமைப்பீர்கள். உணவு, கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்கள் மூலம் ஆதாயம் வந்துசேரும். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

10. உத்தியோகத்தில், வெகுநாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. உங்களைக் குறை கூறிக்கொண்டிருந்த மேலதிகாரி, இனி இணக்கமாக நடப்பார்.

11. கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள். சில வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும். இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்யும்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

குருப்பெயர்ச்சி 2026: கன்னி ராசி அன்பர்களே... வியத்தகு முன்னேற்றம் நிச்சயம்!

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால், தொட்டது துலங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். 1... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026: சிம்ம ராசி அன்பர்களே செலவுகளில் கவனம், செயல்களில் நிதானம் தேவை!

சிம்ம ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல், 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரம், குரு பார்வை பணவரவு மூலம... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026: ஜன்ம குருவாயிற்றே’ என பதற்றம் வேண்டாம்! கடக ராசிக்கு ஜன்ம குரு சாதகமா? பாதகமா?

உங்கள் ராசிக்குள்ளேயே (திருக்கணிதப்படி) வரும் ஜூன் -2 முதல் அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான். ‘ஜன்ம குருவாயிற்றே...’ என்று பதற்றம் அடையாதீர்கள். குரு பகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்கு... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி : 'திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள்; சிற்சில தடைகள்' - ரிஷப ராசிக்கு எப்படி?

உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அவரின் பார்வை பல நன்மைகளைத் தரப்போகிறது உங்களுக்கு! தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026 : `எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு; கவனம் தேவை' - மேஷ ராசிக்கு எப்படி?

உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். பலவகை களிலும் ஆதாயம் பெறப்போகும் காலம் இது. சவால்கள் உண்டு என்றாலும் நிறைவில் வெற்றி நிச்சயம... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண யோகம்... லாபம் யாருக்கு? | வார ராசிபலன் 24.5.26 முதல் 30.5.26 | Vaara Rasi Palan

இந்த வார ராசிபலன். இந்த வாரத்தில் நிகழப்போகும் கிரக பெயர்ச்சிகள், சந்திரனின் சஞ்சாரம், முக்கிய திதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ராசிபலன்களைத் தொகுத்து வழங்குகிறார் இல. சைலபதி. மேலும் பார்க்க