செய்திகள் :

குருப்பெயர்ச்சி 2026: சிம்ம ராசி அன்பர்களே செலவுகளில் கவனம், செயல்களில் நிதானம் தேவை!

post image

சிம்ம ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல், 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரம், குரு பார்வை பணவரவு மூலம் மகிழ்ச்சியைத் தரும்.

1. குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு விஷயத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், நிதானமாகச் செயல்படுவது அவசியம். யாருக்காகவும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள்.

2. குடும்பத்தில் - சொந்த பந்தங்களிடையே வீண் விவாதங்கள் வரக்கூடும். நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், குடும்ப ரகசியங்களை அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சிலருக்குப் பசியின்மை, தூக்கமின்மை வந்துபோகும்.

3. உங்களின் பூர்வபுண்ய - அஷ்டமாதிபதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகனுக்குத் திருமணம் ஏற்பாடாகும்.

4. சஷ்டம - சப்தமாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிமாநிலம், வெளிநாடு செல்வீர்கள். வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் முடியும். வீடு கட்டவும், வாங்கவும் லோன் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

5. தன - லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குரு பயணம் செய்வதால், புதிய பதவிகள் தேடி வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

சிம்ம ராசி

6. குருபகவான் உங்கள் ராசிக்கு 4, 6 மற்றும் 8-ம் இடங்களைப் பார்ப்பதால், தாயாரின் உடல்நலம் சீராகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். கெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடு வீர்கள். சிலர், வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவார்கள்.

7. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். அதேநேரம் திடீர்ச் செலவுகளும் கையைக் கடிக்கும். சிலருக்கு, வழக்குகள் இழுபறியாகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

8. பணவரவு திருப்தி கரமாக இருந்தாலும், சேமித்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

9. மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் அலைச்சல், டென்ஷன் இருக்கும். சின்னச் சின்ன தடங்கல்கள் இருக்கும். எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

10. வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். டிராவல்ஸ், ஹோட்டல், பதிப்பகம், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.

11. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. எனினும் உரிய அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். கணினித் துறையினருக்கு, எதிர்பார்த்தபடி அயல்நாட் டில் வேலை கிடைக்கும். பார்வைக்கோளாறு, சளித்தொந்தரவு இருக்கும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க...https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

குருப்பெயர்ச்சி 2026: கன்னி ராசி அன்பர்களே... வியத்தகு முன்னேற்றம் நிச்சயம்!

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால், தொட்டது துலங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். 1... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026: ஜன்ம குருவாயிற்றே’ என பதற்றம் வேண்டாம்! கடக ராசிக்கு ஜன்ம குரு சாதகமா? பாதகமா?

உங்கள் ராசிக்குள்ளேயே (திருக்கணிதப்படி) வரும் ஜூன் -2 முதல் அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான். ‘ஜன்ம குருவாயிற்றே...’ என்று பதற்றம் அடையாதீர்கள். குரு பகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்கு... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026 : மிதுன ராசிக்கு குருவருளால் வீடு - மனை வாங்கும் யோகம்; அதிரடி லாபம் உண்டு.!

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) ஜூன்-2 முதல் 2-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வங்கியில் அடம... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி : 'திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள்; சிற்சில தடைகள்' - ரிஷப ராசிக்கு எப்படி?

உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அவரின் பார்வை பல நன்மைகளைத் தரப்போகிறது உங்களுக்கு! தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2026 : `எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு; கவனம் தேவை' - மேஷ ராசிக்கு எப்படி?

உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) வருகிற ஜூன் 2 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். பலவகை களிலும் ஆதாயம் பெறப்போகும் காலம் இது. சவால்கள் உண்டு என்றாலும் நிறைவில் வெற்றி நிச்சயம... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண யோகம்... லாபம் யாருக்கு? | வார ராசிபலன் 24.5.26 முதல் 30.5.26 | Vaara Rasi Palan

இந்த வார ராசிபலன். இந்த வாரத்தில் நிகழப்போகும் கிரக பெயர்ச்சிகள், சந்திரனின் சஞ்சாரம், முக்கிய திதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ராசிபலன்களைத் தொகுத்து வழங்குகிறார் இல. சைலபதி. மேலும் பார்க்க