Tvisha Sharma: கணவரின் வாக்குமூலமும் வாட்ஸ்அப் ஆதாரங்களும் - நடிகை ட்விஷா வழக்கி...
"'இளையராஜா அனாதை ஆகிவிட்டாரு'ன்னு ஏன் எழுதணும்?" - கங்கை அமரன் காட்டம்
திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள 'உயிரிணையே' ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், "பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள்.
சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதாதீர்கள்.

யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜாவுடன்தான் இருக்கிறார்.
அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால் இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும். இளையராஜாவை ஏன் இறக்குகிறீர்கள்.
50 ஆண்டுகள் நிலையாக நின்றிருக்கிறார். எங்களை நேசியுங்கள். இல்லாததை எழுதி அவரைக் கேவலப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது.
இது சம்பந்தமாக அவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார். அவரை அவராக இருக்க விடுங்கள்" என்று பேசியிருக்கிறார்.



















