செய்திகள் :

வேலூர்: `மாமூல் கேட்டு மிரட்டியது உண்மைதான்’ - தவெக ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

post image

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலரை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளரான விஜயகுமார். இது தொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபடும் வீடியோ, அண்மையில் வெளியாகியிருந்தது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்திலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் புகாரளித்திருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸார் அவரிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் செங்கல் சூளை உரிமையாளர்களையே அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார்

இதனால், கொந்தளித்துபோன அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் கணியம்பாடி பேருந்து நிறுத்தப் பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

``மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியதைத் தட்டிக்கேட்டதால், சூளைக்கு திருட்டு மண் கடத்தியதாக த.வெ.க ஒன்றியச் செயலாளர் சொல்வதைக் கேட்டு போலீஸார் செயல்படுகின்றனர். த.வெ.க ஒன்றியச் செயலாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மக்கள் கொந்தளிப்போடு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான விஜய் மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நீக்க அறிவிப்பு

கழக தோழர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது. த.வெ.க மாவட்டச் செயலாளர் தரப்பில் விசாரித்தபோது, ``ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டியது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.

Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன பாக்., சவூதி பதில்?

"ஈரானுடன் ஒன்று அனைத்து தரப்பிற்கும் ஏற்ற சிறந்த ஒப்பந்தம் ஏற்படும்... இல்லையென்றால் ஒப்பந்தமே ஏற்படாது. ஒருவேளை, ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய தாக்குதல்கள் ... மேலும் பார்க்க

ராஜினாமா செய்யும் அதிமுக MLA-க்களை தவெக-வில் சேர்க்க எதிர்ப்பு; காங்கிரஸ் பெண் நிர்வாகி பதவி விலகலா?

கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நிதி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தேசிய செயலாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த நிலையில் அ... மேலும் பார்க்க

ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! - குன்னத்தில் நடந்தது என்ன?

தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும்... மேலும் பார்க்க

``விஜய் பதவியேற்பு விழாவில் அந்த 3 பேர் மிஸ்ஸிங்"- சமுத்திரக்கனி யாரை சொல்கிறார்?

தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில்... மேலும் பார்க்க

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saar?" - உதயநிதி கேள்வி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (மே.25) அறிவித்திருந்தார். இந்நிலையில... மேலும் பார்க்க

அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம்; சர்ச்சையில் சிக்கிய சூலூர் தவெக MLA சொல்வது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார். இவரது வீடு கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர... மேலும் பார்க்க