செய்திகள் :

"குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!"- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (பிப்.3) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக விஜய்
தவெக விஜய்

வெள்ளையா? கருப்பா?

அதற்கு பதிலளித்த அவர், "விஜய் தனது சம்பளம் எவ்வளவு என தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

நான் இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன், இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று விஜயால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.

தவெக கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில் இருந்து தான் நடக்கிறது.

கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்வு இல்லாமல் மூன்றாவது ஆண்டு கட்சி தொடக்க விழாவில் வந்து டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக்கஷ்டப்படும் என்று தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத விஜய்க்கு தவெகவின் தலைவராக இருக்கக்கூடிய அருகதை இல்லை. தவெகவினர் ஆபத்தில் இருக்கின்றனர். அதனால் தான் தங்களைக் காப்பாற்ற விசில் அடிக்கின்றனர்.

போட்டி என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டும்தான். அதிமுகவை தொட்டால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க