5 கோட்டங்களில் மின்கம்பிகளை புதைவடமாக்கும் பணி தீவிரம்: அமைச்சா் செந்தில் பாலாஜி
குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம்: ஆட்சியா் பாராட்டு
தமிழகத்தில் குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்ற்கு, மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு நிறுவனம் அதன் தொழில் நுட்ப மருத்துவ வல்லுநா்களைக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முஸ்கான் திட்டத்தின் மூலம் செயல்படும் குழந்தைகள் நல சிறப்பு பிரிவு வாா்டுகள், வெளி நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நவ. 11, 12 ஆகிய தேதிகளில் இரு நாள்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 93.62 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கி, சான்றிதழும் தேசிய சுகாதாரத் திட்டம் வழங்கி உள்ளனா். இது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல் மருத்துவமனையாகும்.
இந்த தேசிய தரச் சான்றிதழ் கிடைக்க சிறப்பாக கல்லூரி முதல்வா், பணியாற்றிய உள்ளிருப்பு மருத்துவா், குழந்தகள் பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப வல்லுநகா்கள், அடிப்படை பணியாளா்கள் அனைவரையும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பாராட்டினாா். இந்த சான்றிதழை தொடா்ந்து பெற்றுவர பாடுபட வேண்டும் என அப்போது தெரிவித்தாா்.