செய்திகள் :

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

post image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற அந்தச் சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்தச் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை காதலித்ததும், அதில் கர்ப்பமானதால் அவரை குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அதனால் ரவீந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.

குழந்தை திருமணம்

அதேபோல விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் 28 வயதான ராஜா என்பவர் சிறுமியை காதலிப்பதாகக் கூற, அதற்கு அவரும் சம்மதித்திருக்கிறார். அதையடுத்து சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதனால் ராஜா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.

அதேபோல, காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் செல்போனுக்கு, கடந்த ஆண்டு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதை எடுத்த அந்தச் சிறுமி, `ராங் கால்' என்று கூறியிருக்கிறார். அப்போது எதிர்முனையில் இருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், `உங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. அழகா பேசறீங்க..' என்று கூறியிருக்கிறார்.

அதையடுத்து இருவரும் வாட்ஸ்-அப் மூலம் பேசி காதலித்து வந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் திருமணத்துக்கு தன்னுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் சிறுமி. அதற்கு, அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் ஆகாஷ்.

போக்சோ

சிறுமியும் அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் உள்ள ஆகாஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் சிறுமியை, கடந்த மாதம் அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார் ஆகாஷ்.

ஆனால் அதன்பிறகு சிறுமியிடம் பேசாமல் மாயமானார் ஆகாஷ். அவரது செல்போன் எண்ணும் `ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டதால், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் சிறுமியின் பெற்றோர். அதையடுத்து குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஆகாஷ் மீது போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் ரவீந்திரன், ராஜா, ஆகாஷ் மூவரையும் தேடி வருகிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க

மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3... மேலும் பார்க்க

சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ. கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர்... மேலும் பார்க்க