செய்திகள் :

`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' - அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்

post image

புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது,

"எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களும் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காது. நிதி ஒதுக்கும் போதுகூட பிற கிராமங்களுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்கள் இறையான்மங்கலம் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த காலனி வீடுகள் மட்டுமே இப்போது இருக்கிறது. அதற்குப் பின்பு ஒரு வீடுகூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வசதி இல்லாமல் 18 வருடங்கள் போராடிய போராட்டத்திற்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குழாய்கள் வைத்தார்கள்.

ஆனாலும் அதில் நீர் வரவில்லை. நீர் இல்லாததால் கழிவறைகளையும் எங்களால் கட்ட முடியாமல், தினமும் காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இங்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஈழக்காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வாரம் ஐம்பதில் இருந்து 100 பக்தர்கள் வரை வழிபாட்டிற்காக வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருபவர்கள் செல்வதற்குக்கூட கழிவறை இல்லை. அதனால் கோயிலுக்கு வந்து செல்பவர்களும் எங்களைப்போல அவதிப்படுகிறார்கள். ஆகவே அரசு எங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

"இன்ஜின் இல்லாத கார் திமுக; அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், ``2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ... மேலும் பார்க்க

வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ``யாருக்காக இந்த ஆட்சி?" - தவெக தலைவர் விஜய் கேள்வி!

சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிற... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தமா? - மணமகள் யார் தெரியுமா?

இந்தியாவின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவருக்கும் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா என்பவ... மேலும் பார்க்க

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையு... மேலும் பார்க்க