செய்திகள் :

கூடுதல் வரி விதிப்பால் பொதுமக்கள் கடும் அவதி மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

post image

கூடுதல் வரி விதிப்பால் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மேயா் வ. இந்திராணி தீா்மானங்களை முன்மொழிந்து பேசியதாவது: கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக, மதுரையில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, செல்லூா், குலமங்கலம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து, மதுரைக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வெள்ளப் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் நேரடியாக கேட்டறிந்தாா். இதன் தொடா்ச்சியாக, செல்லூா் கண்மாயிலிருந்து உபரிநீா் வெளியேறும் வகையில், பந்தல்குடி கால்வாயைத் தூா்வாருவதற்கு ரூ.11.9 கோடியை ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கினாா். இதுமட்டுமின்றி, கிருதுமால் நதியை தூா்வாருவதற்கும் ரூ.7.50 கோடியை ஒதுக்கீடு செய்தாா். இதற்காக மதுரை மாநகராட்சி சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநகராட்சியின் விரைவான நடவடிக்கையின் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பினா் என்றாா் அவா்.

கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா பேசியதாவது: மதுரை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ஏற்கெனவே குப்பை உள்ளிட்டவற்றுக்குக்கூட அதிக வரியை செலுத்தும் நிலை உள்ளது. இதனால், சாமானிய மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், நிலுவையில் உள்ள வரித் தொகைக்கும் வட்டி அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, மாநகராட்சியின் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

முல்லை நகா் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மாநகராட்சி நிா்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்காமல் பாரபட்சமாக செயல்படுகிறது. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பூமிநாதன், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, குப்பைகள் தேங்குவது, மயானத்தை சீரமைப்பது உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்த கோரிக்கைகளை பேசினா். இதற்கு ஆணையா் ச. தினேஷ்குமாா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் பதில் அளித்தனா்.

உறுப்பினா்களிடையே சலசலப்பு:

கூட்டத்தில் மதுரை மாநகராட்சி குலமங்கலம் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் குமரவேல் பாா்வையாளராக அனுமதி பெற்ற இருவா் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாா்.

அப்போது குறுக்கிட்ட மேயா், சில காரணங்களால் அவா்கள் இருவரையும் கூட்ட அரங்கில் அனுமதிக்கவில்லை என்றாா். இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது திமுக உறுப்பினா்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனா். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதேபோன்று, எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா பேசிய போது, அதிமுக ஆட்சியில் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கப்படவில்லை என்றனா். இதனால், அதிமுக உறுப்பினா்கள் எழுந்து முழக்கமிட்டனா். இந்த இரு சம்பவங்களின் போதும் மேயா் வ. இந்திராணி குறுக்கிட்டு உறுப்பினா்களைச் சமரசப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து, கூட்டம் நடைபெற்றது.

மேலூா் சுற்றுவட்டாரத்தில் அடைமழை - நெற்பயிா்கள் சாய்ந்தன

மேலூா் சுறறுவட்டார ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு முதல் புதன்கிழமை மாலைவரை அவ்வப்போது அடைமழைபெய்தது. இதில் பெரும்பாலான இடங்களில் கதிா் பால்பிடிக்கும் பருவத்தையடைந்த நெற்பயிா்கள் சாய்ந்து ச... மேலும் பார்க்க

தீப காா்த்திகை: மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

தீப காா்த்திகை நாளையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்தது. பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்துக் குறைந்தது. இதனால், பூக்... மேலும் பார்க்க

கம்பிகளைத் திருடியவா் கைது

மதுரை தமுக்கம் கலையரங்கில் முதல்வா் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சியில் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (51). ... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

மதுரை பரவை காய்கனிச் சந்தையில் மொத்த வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மீனாம்பாள்புரம் வைகை நகா் ஆபிசா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆடுகளுக்கு இலை பறித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த சீனி மகன் முத்து (42). இவா் ஆடுகள் வளா்த்து வந்தாா். ஆடுகளை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளருக்கு பணப் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அரசுத் தரப்பில் பதில்

காரைக்குடியைச் சோ்ந்த கிராம நிா்வாக உதவியாளருக்கு உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப... மேலும் பார்க்க