செய்திகள் :

”கேக் வழங்குவது ஒரு திட்டமா? கேவலம் அது” - விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயனின் பேச்சு

post image

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் அத்தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ எந்தத் தகவலும் முறையாகத் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை நடைபெற்றபோது மாவட்ட ஆட்சியருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். ஆய்வுகள் நடக்கும்போது 24 மணி நேரத்திற்கு முன்பு எனக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை அவர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

மார்கண்டேயன்

தொகுதியில் உள்ள குறைகள் குறித்தும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகளுக்கு அச்சப்பட்டு ஆய்வுக் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. ஆய்வுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.  முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா அல்லது தன்னிச்சையாக நடத்துகின்ற அரசா என்று தெரியவில்லை. இங்குள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்வோம்.

 என்னைவிட இங்குள்ள பிரச்சினைகள் குறித்து கூடுதலாகக் கூறினால் எங்களைக் கூப்பிட வேண்டாம். மக்கள் தங்களது குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், நிறைகளைப் பெறுவதற்கும்தான் மக்கள் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை. இதற்கு முதலமைச்சரின் மோசமான நிர்வாகம்தான் காரணம்.  எங்கள் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் வந்ததை வரவேற்கிறேன். நான் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அழைக்காமல் இருக்கிறார்களா என்ற வினாவை வைக்கிறேன். கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தின்போது, முதல்வருக்கு அரோகரா என்று கூறுகின்றனர்.

மார்கண்டேயன்

முதல்வருக்கு அரோகரா போட வேண்டிய அவசியம் என்ன? இவர்களுக்கு அரோகரா பற்றி தெரியுமா? மாவட்ட ஆட்சித் தலைவர் குற்றவாளி என்று நான் பதிவு செய்கிறேன். விளாத்திகுளம் தொகுதிக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது யார்? அரசாங்கம் கொடுத்த அனுமதியா, மக்கள் கொடுத்த அனுமதியா? மக்கள் பிரதிநிதிக்குத் தெரியாமல் வருவது என்பது ஒரு குற்றம். இந்த அரசாங்கம் கேள்வி கேட்பார்கள் என்று எங்களைப் புறக்கணிக்கிறது.  ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சொன்னால் அவர்களே  கேக்கினை ஸ்பான்சர் செய்து வழங்கப் போகிறார்கள்.

இந்த கேக் வழங்க எவ்வளவு கோடி செலவிடப்பட்டுள்ளது? முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனச் சரித்திரத் திட்டத்தைக் கொடுத்தார். கேக் வழங்கும் திட்டம் ஒரு திட்டமா? கேவலம் அது. ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி ஜோசப் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள். விளாத்திகுளம் தொகுதியில் கே. தங்கம்மாள்புரத்தில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்குக் குடிக்கவும் தண்ணீர் இல்லை, குளிக்கவும் தண்ணீர் இல்லை. குளத்திற்குச் செல்லும் நிலை உள்ளது. அங்கு மாணவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது?

மார்கண்டேயன்

95,000 லிட்டர் தண்ணீர் செல்லும் அந்தக் கிராமத்தில் 50 மாணவர்களுக்கு 500 லிட்டர் தண்ணீர் கொடுக்க முடியாதா? ஏன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கவில்லை?  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் 214 கிராமங்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரில் 113 கிராமங்களுக்கு இன்னமும் குடிநீர் போகவில்லை. செயலிழந்து போய்க் கிடக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி மரணப் படுக்கையில் இருக்கிறது. ஆட்சித் தலைவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும் மக்களுக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை வாழவைக்க வேண்டிய எண்ணம் ஆட்சிக்கும் இல்லை, நிர்வாகத்திற்கும் இல்லை.” என்றார்.  

``அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு திமுகதான்" - மாணிக்கம் தாகூர் காட்டம்!

கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ... மேலும் பார்க்க

``தவெகவினர் `இதுல எப்படிணே எரியும்?' என்பதை போல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர்"- இபிஎஸ் தாக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல் தவெக நிர்வாகிகள் நீரை திறந்து விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சோத்துபாறை அணையில் நீர் திறக்க சம்பந்தப்பட்ட அரசு ... மேலும் பார்க்க

ஊடகவியலாளர் அருண் ராம்: ``இது பாசிசமா பாயாசமா?" - முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்!

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் ஆசிரியர்களில் ஒருவரான அருண் ராம், `Hero's silence, party's shame: Joseph Vijay's reluctance to reign in unruly elements is harming TVK and govt' என்ற தலைப்பில், ``தமிழ்நா... மேலும் பார்க்க

சோனியா புத்தக விழா: 'காங்கிரஸ் அழைப்பை ஸ்டாலின் நிராகரித்தாரா?' - ஆர்.எஸ்.பாரதி பதில்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "விலைவாசி உயர்வு பற்றி ஆட்சியாளர்களுக்க... மேலும் பார்க்க

ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா - இந்த மூன்று பவர்ஃபுல்லான உலக நாடுகளின் தலைவர்களும் நாளை ஓர் அறையில் கூடுகிறார்கள். இந்த மூன்று உலக நாடுகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போவது இத... மேலும் பார்க்க

'சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பிதழ்..!'- ஸ்டாலின் கூறியதென்ன?

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். மேகதாது விவகாரத்தில் நீங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் எதுவும் தெரிவிக்காமல்... மேலும் பார்க்க