செய்திகள் :

கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை

post image

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60).

மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத் தோட்டத் தொழிலாளியான கிருஷ்ணசுவாமியும், அவரது தாய் சின்னத்தாம்மாளும் அந்தக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்தாம்மாள் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டிற்கு வெளியே வரவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக வீட்டிலிருந்து தொடர்ச்சியாக ஊதுபத்தி மற்றும் சந்தனத்தின் நறுமணம் வந்து கொண்டிருந்துள்ளது. மேலும், கிருஷ்ணசுவாமியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்திக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்தி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு பாட்டி இறந்த நிலையில் உள்ளதைப் பார்த்தார். இதையடுத்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறையில் துணியால் மூடப்பட்ட நிலையில் சின்னத்தாம்மாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மரணம்
மரணம்

அறையின் பல இடங்களில் ஊதுபத்திகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டிருந்தன. சின்னத்தாம்மாள் இறந்து சுமார் மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் என்றும், ஊதுபத்திகள் மற்றும் சந்தணக்கட்டைகள் தொடர்ந்து எரிக்கப்பட்டதால் துர்நாற்றம் வெளியே தெரியவில்லை என்றும் கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குளத்துப்புழா காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மரணமடைந்த சின்னத்தாம்மாள்
மரணமடைந்த சின்னத்தாம்மாள்

சின்னத்தாம்மாளின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், இது இயற்கையான மரணமே என்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணசுவாமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்திவிட்டு போலீஸார் விடுவித்தனர்.

சின்னத்தாம்மாளின் இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு, கிருஷ்ணசுவாமியை மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளத்துப்புழா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க