செய்திகள் :

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

post image

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 15 ம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தைத் திருடியுள்ளனர். இதைப் பார்த்த பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாகப் புகார் அளித்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஒரு உண்டியலை எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது உறுதியானது.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகாரின் பேரில் பூசாரி உட்பட 4 பேரையும் உக்கடம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பாலசுப்பிமணியன், சரவணன், பிரதீப்குமார்,கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும், பணம் திருடப்பட்டதைக் கண்டறியாமல் ஆஜாக்கிரதையாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோவில் செயல் அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ஆகிய 8 பேரையும்  சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்... மேலும் பார்க்க

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்... மேலும் பார்க்க

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரம... மேலும் பார்க்க

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" - நயினார் நாகேந்திரன் பாராட்டு

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது.இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறத... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்... மேலும் பார்க்க