செய்திகள் :

``திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" - நிர்மல் குமார்

post image

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட் தேர்வைச் ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராடி வருகிறார்கள். இதில் எந்தவித கட்சி அடையாளமும் இல்லாமல் தவெக இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், தி.மு.க அரசு இதிலும் தலையிட்டு, 200, 300 ரூபாய் கொடுத்து சிலரை அழைத்து வந்து, 'ஜென்-ஜி தி.மு.க' (Gen-Z DMK) என்ற டி-ஷர்ட்டை அணிய வைத்துப் போராட்டத்தைத் திசைதிருப்பவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஜென்-ஜி’ என்றால் என்னவென்றே புரியவில்லை. அவருக்கு யாரோ தவறான ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள். தேர்தல் நேரத்தில் 'பெண் டீம்' அமைத்து அவரைத் தவறாக வழிநடத்தியது போல, இப்போதும் அவரிடம் தவறான புரிதலை உருவாக்கியுள்ளனர்.

உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, தனது தகுதியைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

தி.மு.க-வின் தற்போதைய தலைவர் 'திராவிட மாடல்' என்று கூறிச் தன் தலைமையில் ஆட்சி நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் சென்றுவிட்டார்.

உதயநிதிக்கும் அதே குழப்பம்தான் நீடிக்கிறது. கட்சி நிர்வாகிகளை அழைத்து, அண்ணா உருவாக்கிய தி.மு.க-வை வழிநடத்த உதயநிதிக்குத் தகுதி இருக்கிறா அல்லது கனிமொழிக்குத் தகுதி இருக்கிறா என்பது குறித்து உட்கட்சி வாக்கெடுப்பு நடத்திப் பார்க்க வேண்டும். அதன் முடிவையாவது அவர் பார்த்துத் தன் தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும்.

புதிய அரசுப் பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்கள் பயன்படுத்தப்படுவதாக எழும் சர்ச்சைகளுக்கு அடிப்படையே இல்லை.

உதயநிதி, கனிமொழி
உதயநிதி, கனிமொழி

கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பேருந்துகளிலோ, பேனர்களிலோ விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் த.வெ.க-விற்கு கிடையாது. தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அறிவித்த ஒரு நொடியிலேயே அது உலகளவில் மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது.

இதுபோன்று விளம்பரம் தேடும் மலிவான அரசியலை தவெக தலைவர் என்றுமே அனுமதிக்க மாட்டார். நீண்ட காலமாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்யத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் 'ஆர்ட்ஸ் ஆக்ட்' (Arms Act) பிரிவின் கீழ் வருவதால் ஒன்றிய அரசின் சில சட்ட நெறிமுறைகள் உள்ளன. விரைவில் இதற்கான நல்ல முடிவு எட்டப்படும்" என்றார்.

"எங்களை வெளியேற்ற கூடாது" - தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.இதனிடையே ஸ்ரீவில்லிபுத... மேலும் பார்க்க

'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? - பின்னணி என்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த காத்திருப்புப் போராட்டம் நேற்று நள்ளிரவில் கடும் வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. டெல்லி போராட்டம் ச... மேலும் பார்க்க

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்... மேலும் பார்க்க

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்... மேலும் பார்க்க

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரம... மேலும் பார்க்க

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல... மேலும் பார்க்க