செய்திகள் :

கேரளம்: 12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை; அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் கைது

post image

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த சிறுவர்களுக்கு இம்மாதம் தொடக்கத்தில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னை சீர்திருத்தப்பள்ளி காப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளான்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் பி.அயூப், தன்னை அந்தக் காப்பகத்திலேயே வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுவன் தெரிவித்தான். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் தெரிவித்தான்.

இதையடுத்து அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளராக இருந்த செலவூர் பகுதியைச் சேர்ந்த பி.அயூப் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் சேவாயூர் போலீஸார் ஜூன் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட அயூப்
கைதுசெய்யப்பட்ட அயூப்

போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்தவுடன் காப்பாளர் பி.அயூப் தலைமறைவானார். அவரைக் கைது செய்வதற்காக போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததை அடுத்து, தப்பிக்க வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி.அயூப், இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சிறுவனுக்கு பாலியல் கொடுமை
சிறுவனுக்கு பாலியல் கொடுமை

பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனைத் தவிர, அந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்கியிருக்கும் மற்ற சிறுவர்களிடமும் அயூப் இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சேவாயூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ​

அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலேயே சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். ச... மேலும் பார்க்க

கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவ... மேலும் பார்க்க

காரில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; நூலிழையில் உயிர் தப்பிய காதலி; உடல் கருகி பலியான காதலன்!

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் கல்லம்பெல்லா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து, தீ பற்றியது. காரிலிருந்த கார் ஓட்டுநரும், பெண்ணும் உயிர் தப்பிய நிலையில்,... மேலும் பார்க்க

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில்உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும... மேலும் பார்க்க

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது... மேலும் பார்க்க