செய்திகள் :

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

post image

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க மேயருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து அரசியல் ரீதியான எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ்
திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ்

இது குறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பா.ஜ.க தலைவர் வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது.

வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் பினராயி விஜயனின் தனி உதவியாளரை வி.வி.ராஜேஷ் போனில் அழைத்திருந்தார்.

அப்போது முதல்வர் அருகில் இல்லாத காரணத்தால் பிறகு இணைப்பு வழங்குவதாக உதவியாளர் தெரிவித்தார்.

மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்
மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்

முதல்வர் வந்த பிறகு வி.வி.ராஜேஷுக்கு போன் கணெக்ட் செய்தார் உதவியாளர். அப்போது பேசிய வி.வி.ராஜேஷ், தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், பதவி ஏற்ற பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

'ஆகட்டும், வாழ்த்துகள்' என முதல்வர் பதிலளித்தார். ஆனால், முதல்வர் போனில் அழைத்து வி.வி.ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதன் பின்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.

அது உண்மைக்குப் புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மீரியாக்கள் செய்தியைத் திருத்தும் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர்

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அ... மேலும் பார்க்க

DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?

'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்'- ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.ஒரு... மேலும் பார்க்க

"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" - சொல்வது ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத... மேலும் பார்க்க