செய்திகள் :

கேரவனில் நடிகையை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு - கேரளா இயக்குநர் ரஞ்சித் சிறையில் அடைப்பு!

post image

கேரள மாநிலம் கொச்சியில் சினிமா படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளம் நடிகை ஒருவர் இயக்குநர் ரஞ்சித் மீது புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஞ்சித் மீது வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், சிறைவைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை தொடுபுழாவில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த போலீஸார் அவரை கொச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று அவர் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரஞ்சித்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் எர்ணாகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரஞ்சித்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும், நடிகை கேரவனில் இருந்து இறங்கி ஓடியதை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் தலைமறைவாக இருக்க உதவியவர்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், நடிகையின் புகார், வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமார் தெரிவித்தார்.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

ரஞ்சித்தை போலீஸாரின் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதியிடம் மனு அளித்தனர். அதே சமயம் ரஞ்சித் தரப்பு ஜாமீன் கோரி மனு அளித்துள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் எர்ணாகுளம் முதலாவது வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. சம்பவத்தன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள சி சி.டி.வி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் இது தனக்கு எதிரான சதி எனவும், உண்மை வெல்லும் எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சினிமா இயக்குநர் ரஞ்சித்

பாலியல் புகாரைத் தொடர்ந்து ​​பெப்கா எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும், இயக்குனர் சங்கத்தில் இருந்தும் ரஞ்சித் நீக்கப்பட்டுள்ளார். ​பாலேரி மாணிக்கம் சினிமா படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை செய்ததாக ஒரு பெண் ரஞ்சித்துக்கு எதிராக இதற்கு முன்பு புகார் அளித்திருந்தார். மேலும், மற்றொரு பாலியல் வழக்கும் ரஞ்சித் மீது பதியப்பட்டிருந்தது. அந்த புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, கவுன்சிலிங் பெற்ற பின்னரே புகார் அளித்தார் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க